Powered By Blogger

Friday, July 30, 2010

பொழப்பத்த போடோக்ராபர்

நம்ப நண்பர் ஒருத்தர் இருக்கார் அவரு பொழப்பே பொழப்பு இல்லாமல் எதையாச்சும் புகைப்படம் எடுத்துக்குட்டு வந்து என்னை பாரு பாருன்னு பொழப்பு இல்லாமல் தொல்லை பண்ணுவாரு அந்த கொடுமையை நான் மட்டும் அனுபவித்தால் மட்டும் போதும்மா நீங்களும் கொஞ்சம் அனுபவியுங்கள் பொழப்பு இல்லாமல் அவர் எடுத்த புகை படத்தை நான் பொழப்பு இல்லாமல் போடுறேன் நீங்களும் கொஞ்சம் பொழப்பு இல்லாமல் பார்த்துட்டு போங்க

கோவைல ஜெயலலிதா வந்தப்போ எடுத்த புகை படம் கோவை குசும்பு தெரிதா

காவல்க்காரர் பின்னல் கட்சி கொடியை ஏந்தி செல்லும் கட்சியின் ரத்தத்தின் ரத்தம் மிக சிறந்த குடிமகன் இவர்

நானும் பிட்சாவும்

எனக்கும் ரொம்ப நாளாய் ஒரு ஆசை நம்பளும் ஒரு வெள்ளைக்காரன் மாதிரி சாப்பிடனும்னு அதுக்கு ரொம்ப மெனக்கெட்டு என்ன சாப்பிடனும்னு கிழக்கை மேற்கை ஒரே நேரத்தில் பார்த்து யோசிக்க ஆரம்பிச்சேன் அப்போ தான் எனக்கு கண நேரத்தில் உதயமாயிற்று பிட்சா சாபிடலாம் என்று

ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்கமாட்டேன் கிற பஞ்ச வசனத்தை தொலைகாட்சியில் பார்த்து விரா வேசம் கொண்டு பிட்சா சாப்பிட போர்கோலம் பூண்டு நண்பர்களை பிட்சா சாப்பிட அதரவு தருமாறு கேட்டு கொள்ள புயல் என நண்பர்கள் இருப்பிடம் நோக்கி சுத்தும் சூறாவளியாக சென்றேன்

என் எண்ணகோலம் கண்டுகொண்ட என் நண்பர்கள் பின்னங் கால் பிடரியில் அடிக்க முன்னம் கால் மூஞ்சியில் பட தெறித்து ஓடினார்கள் ஆயிரம் யானைகள் வந்தாலும் ஒன்றாக இணைந்து எதிர்போம் உனக்கு ஒன்று என்றால் ஒரு ஆயிரம் கைகள் ஒன்று சேர்ந்து வரும் என்று சொன்ன நண்பர்களின் ஓட்டத்தை கண்டும் மனம் தளராமல் பிட்சா கடை நோக்கி என் பயணத்தை ஆரம்பித்தேன்

பிட்சா கடைக்கு போன பொழுதான் தெரிந்து கொண்டேன் அது பிட்சா கடை இல்லை பிட்சா ஹுட் ஆம் சரி சிறு நரியின் குகையில் சிங்கம் நுழைந்தது என்ன தான் சிறு நரியின் குகையாய் இருந்தாலும் அது சிங்கத்திற்கு புதியது தானே நானும் கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அடுத்தவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் எவனும் சாப்பிடுவதாக இல்லை குட்டிக்கிட்டு வந்த பொண்ணு கையை தடவறதும் காலை நோன்டறதும் இந்த தமிழனின் மனம் என் கலாச்சாரத்தின் சீரழிவை கண்டு மனம் கொதித்தது அறுதல் கூறுவது போல் என் எதிரில் இரண்டு பெண்கள் வந்து அமர்ந்தார்கள்

சரி முடிந்தது முடிந்து விட்டது என்று அமர்ந்து கொண்டேன் ஒரு சிகப்பு சட்டை என்கிட்டே வந்து ஒரு அட்டையை குடுத்து ஆர்டர் பிளிஸ் நு கேட்டான் நான் சொன்னேன் நான் எந்த நிதிமன்றதிலும் நிதிபதி இல்லைன்னு சொன்னேன் அதுக்கு அவன் சொன்னான் என்ன சாபிடிரிங்கனு நான் சொன்னேன் பிட்சா குடுன்னு அதுக்கு அவன் கேட்டான் என்ன பிட்சா வேணுமுன்னு நமக்கு தான் மசால் தோசை, இடியப்பம் , முட்டை தோசை தவிர வேற ஒன்னும் தெரியாதே சரி நு அட்டையை பார்த்து வாய்க்கு வந்ததை சொல்லிட்டேன்

அவனும் உள்ளே போய் ஒரு மணிநேரம் கழிச்சு கொண்டுவந்து வைத்தான் வட்டமாய் ஒரு வஸ்துவை ஒரு பக்கம் கத்தி இன்னொரு பக்கம் முள்ளு கரண்டி நானும் எதிர்ல உக்கார்ந்து இருந்த பிகர் எப்படி சாப்பிடுதுன்னு பார்த்துட்டு அப்படிய சாப்பிட ஆரம்பிச்சேன்

அப்போ தான் தெரிஞ்சுது வெள்ளைக்காரன் எப்படி நம்பளை ஆட்டி படைச்சனு வாய்க்குள் போன பிட்சா வயிற்ருகுள் போகவே இல்லை நம்ப உரு கேப்ப களியை ரொட்டி மாதிரி சுட்டு நம்ப தலையில் கட்டறனு கேப்ப களி என்னக்கு சும்மாவே ஊருல கிடைக்கும் அடங்காம நான் போனதுக்கு தண்ட செலவு 500 ருபாய்

சுத்தும் சுறாவளி சீரும் சிங்கமாய் பிட்சா கடைக்குள் ( பிட்சா ஹுட் நு திருத்தும் சொல்லாதிங்க நம்ப நம்பளாயி இருப்போம் ) போனவன் காஞ்சுபோன கருவாடு கணக்காய் திரும்பிவந்தேன் வெளிய பார்த்தா என் நண்பர்கள் குட்டம் எதோ சனி கிரகத்துக்கு பயணம் போயிடு வந்தவன் மாதிரி என்னை பார்க்க ஆரம்பித்தார்கள் உள்ளே நடந்ததை வெளியில் சொல்லவா முடியும் நானும் ஆகா பிச்சா ந பிட்சா தாணு அள்ளி விட ஆரம்பித்தேன் ( இப்போ தான் தெரிது நாட்டுல பல் பேரு எப்படி தான் திரிய ராணுகனு நான் சொல்லலை எதிர்தாபுல இரண்டு பிகர் அதுகளும் முஞ்சில் எருமை சாணியை அப்பினார் போல் போனாங்க ஆனால் பேசுனது என்னவோ பிட்சா வை இவளுக கண்டுபுடுச்சதை போல் நிறை குறைகளை சொல்லிக்கிட்டு போனலுக )

Tuesday, July 13, 2010

கோவைல ஆதிமுக விலைவாசி உயர்வை எதிர்த்து கண்டன பேரணி நடந்தது அதை பற்றி சில துளிகள்

எப்பொழுதும் போல் நான் எதையும் கண்டுக்காமல் கடமை மேல் ஒங்க வேலைக்கு புறப்பட்டேன் போறவழி எல்லாம் நெரிசல் மாற்று வழி மாற்று வழி நு சாய்பாபா காலனி ல கிளம்பின என்னை பந்தய சாலை ( அது தாங்க race course ரோடு செம் மொழி மாநாடு நடந்த ஊர்ல ஆங்கிலம் பேச எழுத கூடாது நு என் நண்பன் பிரசன்னா தடுதுடான் ) ல கொண்டுபோய் நிறுத்திட்டாங்க அதுக்கு மேல்ல போக முடியலை அந்த அளவுக்கு வாகன நெரிசல் மக்கள் நெரிசல் சரி என்ன தான் பண்றாங்க நு தெரிசுக்க ஆசைப்பட்டு நானும் போகலாமுன்னு முடிவு பண்ணி மாநாடு நடந்த எடத்துக்கு போக நடக்க ஆரம்பித்தேன்

என் பின்னாலும் மக்கள் வெள்ளம் முன்னாலும் மக்கள் வெள்ளம் அணை போட்டாலும் தடுக்க முடியாத வெள்ளம் சரின்னு அந்த வெள்ளத்தில் எதிர் நீச்சல் ( பாலசந்தர் படம்னு சொல்ல கூடாது ) போட்டு மாநாடு நடக்கிற இடத்தை வெற்றிகரமாய் அடைந்தேன் மதில் சுவர் தாண்டி இடையில் இருந்த தடைகளை தாண்டி தாண்டி ( அப்பா எவ்ளவு தாண்டி பக்கத்துக்கு வீடு எதிர்த்த வீடு சுவரை தாண்டின பழக்கம் கை கொடுத்தது இல்ல கால் கொடுத்தது எதுக்கு தாண்டுன நு எல்லாம் கேள்வி கேக்க கூடாது ) ஒரு மாதிரியாய் மாநாடு பந்தல் கிட்ட போய் சேர்ந்தேன்

மாநாடு பந்தல் மேல் ஒரு பெண் சிங்கம் கர்ஜனை பண்ணிக்கிட்டு இருந்தது கண்ணை நல்ல துடைச்சு பார்த்த ஜெயலலிதா சும்மா பிண்ணி பிடல் எடுத்துகிட்டு இருந்தாங்க எப்பொழுதும் போல் முன்னால் அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் பய பக்தியாய் படியில் நின்னுகிட்டு கிருஷ்ணா பரமாத்தா கிட்ட அர்ஜுனன் கீதை கேட்ட மாதிரி கை கட்டி வாய் மூடி தலைவி பேசுறதை கேட்டு கிட்டு இருந்தாங்க ஆம்மாம் கோவையில் ஒரு மஹா பாரத போர் நடந்தது கௌரவர்கள் கருணாநிதியின் தலைமையில் செம் மொழி மாநாடு நடத்துனாங்க பாண்டவர்கள் ஜெயலிதாவின் தலைமையில் பொது குட்டம் நடத்துனாங்க

உண்மை என்னன்னா மக்கள் அதரவு பாண்டவர்களுக்கு தான் கிடைத்தது மனித அலை கடல் பொங்கியது கோவையில் கோவை நின்றது ( கோவைக்கு என்ன பைல்ஸ ஆ நு கேள்வி கேக்க கூடாது )

சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல் ல சொல்லனுமுனா கண்ணா பன்னிகள் தான் குட்டமாய் செம் மொழி மாநாடு நடத்தும் சிங்கம் சிங்க்லா பொது குட்டம் போடும்

Thursday, July 8, 2010

என்னை பற்றி

ஒன்னும் பெருசாய் சொல்றதுக்கு இல்லை கொங்கு நாட்டை சேர்ந்த ஈரோடு ல பொறந்தேன் பொறந்ததுக்கு பலனா பல ஊருல வேலை பார்த்துட்டு இப்போ கோவைல இருக்கேன்

எனக்கும் ஒரு ஆசை நம்பளும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்னு அதை பல பேர் படிச்சு குழம்பனும் என்கின்ற உயர்ந்த நோக்கத்தோடு ஆரம்பிச்ச ப்ளாக் இது , நான் ப்ளாக் அரம்பிச்சதுனால பெட்ரோல் விலை, விலைவாசி குறையும் லஞ்சம் மறையும் நு கைபுள்ளதனமாய் நினைக்க கூடாது

தலைப்பு என்ன வைகிலாமுனு கிழக்கு மேற்க்கு பார்த்து யோசிசுகிட்டு இருந்தேன் அப்போ தான் இந்த தலைப்பு கிடைத்தது
தலைப்பை பற்றி ஒரு விளக்கம்

நானும் என் நண்பன் பிரசன்னாவும் டி குடிக்க டி கடைக்கு போன்னோம் அப்போ டி கடை பையன் வந்து என்ன சாபிடிரிங்க நு கேட்டான், நான் சொன்னேன் ஒரு மசால் தோசை ஒரு முட்டை பொடி மாஸ் நு அதுகப்புறம் நடந்ததை நான் சொல்லனுமா அப்பாவித்தனமாய் கேள்வி கேட்டு அடி வாங்குறதே நம்ப பொழப்பு ஆகிடுச்சு, அதனால் அப்பாவின்னு தலைப்பு வச்சேன்

வெட்டியா எல்லா ஊருக்கும் போவேன் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் நாடோடி மாதிரி சுத்துவேன் அதனால் நாடோடி நு பேர் வச்சேன்

ஹப்பாடா எப்படியோ தலைப்புக்கு விளக்கம் குடுத்தாச்சு

இனிமேல் நான் உளறதை நீங்க படிக்கணும் , உளறது என் தலை விதி அதை படிக்கிறது உங்க தலை விதி